பிரபல தனியார் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துமென அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றில் தற்காத்துக்கொள்ள மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திவருகின்றனர். முதல் கொரோனா தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 12 முதல் 16 வார கால இடைவெளிக்கு பிறகு இரண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு துணைத் தலைவரும் பால் ஸ்டோஃபெல்ஸ் கூறுகையில் “உலகளவில் இருக்கும் மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி தற்போது உருவாகி வரும் டெல்டா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும்” என அவர் கூறியுள்ளார்.