தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 24ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, இம்மாதம் 7ம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.







