முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

போலி பி.எச்.டி பட்டம்.. சினிமா பெண் தயாரிப்பாளர் திடீர் கைது!

முனைவர் பட்டத்தை போலியாக பெற்றதாக, சினிமா பெண் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் சுவப்னா பட்கர் (39). சினிமா தயாரிப்பாளரான இவர், ராயல் மராத்தா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் மராத்தியில், ’பால்காடு’ என்ற படத்தை தயாரித்தார். இது, மறைந்த சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாற்று கதையாகும். இதையடுத்து இவர் பிரபலமானார்.

இவர், கடந்த 2016-ம் ஆண்டு முதல், பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், மனநல பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதற்கான முனைவர் (பி.எச்.டி). பட்டம் பெற்றிருப்பதாக சான்றிதழ் சமர்பித்திருந்தார். சமூக ஆர்வலர் குர்தீப் கவுர்சிங் என்பவர் கடந்த மாதம் 26- ஆம் தேதி மும்பை பாந்த்ரா போலீசில் புகார் அளித்தார். அதில், தயாரிப்பாளர் சுவப்னா பட்கர், கான்பூரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து போலியாக முனைவர் பட்டம் பெற்று, மருத்துவமனையில் கவுரவ ஆலோசகராக இருந்து வருகிறார் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது உண்மை என்று தெரியவந்ததை அடுத்து, அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Advertisement:

Related posts

அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Ezhilarasan

பிரதமர் மோடி இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் – ராகுல் காந்தி

Jayapriya

இணையத்தை கலக்கும் விலங்குகளின் ட்வீட்!

Vandhana