நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 63 நாட்களுக்கு பின்னர் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 86,498 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 2,89,96,473 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இன்று பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 63 நாட்களில் பதிவான பாதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்.
அதேபோல 2,123 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,51,309 ஆக அதிகரித்துள்ளது. 1,82,282 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,73,41,462 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 13,03,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல 23,61,98,726 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







