நாய்களின் மோப்ப சக்தி மூலம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளில் இருந்து, நோய்த்தொற்றை கண்டறிய முடியும் என்பதை பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் தெரிவித்ததாவது, “இந்த ஆய்வில், முதலில் நாய்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் தொற்று அல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வாசனை வேறுபாட்டை கற்றுக் கொடுக்க நாம் முயற்சித்தோம்.
அதன்படி, கொரோனா பாதித்தவர்கள் ஒரு நாள் இரவு முழுவதும் அணிந்திருந்த டி-சர்ட்டுகளை, நாய்களிடம் கொடுத்து மோப்பம் பிடித்து, அவர்களின் வாசனையை கண்டுபிடிக்க கற்றுக் கொடுத்தோம். இதுபோன்று நூறில் இருந்து ஆயிரம் மாதிரிகளை
எடுத்து, நாய்களிடம் பரிசோதனை மேற்கொண்டோம். இப்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தொற்று இல்லாதவரகள் என சிறுவர்கள், பெரியவர்கள் ஆகியோரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக, லாப்ரடர் உள்ளிட்ட ஒன்பது வெவ்வேறு இன நாய்களை கொண்டு, கொரோனா தொற்றுள்ளவர்களின் சிறுநீரகம் மாதிரிகளை வைத்து, நாய்கள் எவ்வாறு தொற்று உள்ளவர்களை கண்டுபிடிக்கிறது என அவைகளின் மோப்ப திறனைப் பரிசோதித்தோம். அதன் முடிவில் அவைகளால் கொரோனா பாதித்தவர்களை 96 சதவிகிதம் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை தெரிந்துக் கொண்டோம்.
இதற்கு முன்பு இப்படி நாய்களின் மோப்ப திறனைப் பயன்படுத்தி, கருப்பை புற்றுநோய் உள்ள பெண்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் உலகளவில் இந்த பெருந்தொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் இந்த ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்ததாக.” அவர் தெரிவித்தார்.







