முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா அதிகரிக்கும் சூழலில் பெரிய பேரணிகள் நடத்த வேண்டுமா? ராகுல் காந்தி

மேற்வங்கு மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால், அங்கு நடைபெறவிருந்த காங்கிரஸ் பேரணியை, எம்பி ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 5வது கட்ட தேர்தல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 6வது கட்ட தேர்தல் பரப்புரையில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் இன்று நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா அதிகரித்து வருவதால் மேற்குவங்க மாநிலத்தில் தனது பேரணிகளை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் பெரிய பேரணிகளை நடத்த வேண்டுமா என்பதை அரசியல் தலைவர்கள் யோசித்து பார்க்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை!

அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Saravana

திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு தாக்குதல் ; கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

Web Editor