மதுரையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரையில், வறட்சி காரணமாகக் கண்மாய், குளங்கள் சில ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தன. இதனால் மீன்பிடி…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரையில், வறட்சி காரணமாகக் கண்மாய், குளங்கள் சில ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தன. இதனால் மீன்பிடி திருவிழா நடத்தப்படவில்லை. கடந்தாண்டு பெய்த பருவமழையால் கண்மாய்கள் நிரம்பின. தற்போது நீர் வற்றியதை தொடர்ந்து, மீன்பிடி திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி உடைகுளம் கண்மாயில் நடத்தப்பட்ட மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொண்டு விரால், கெண்டை, குரவை, கெழுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.