கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததாலேயே, திமுக கூட்டுகிறது! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததாலேயே, திமுக கூட்டுவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் கட்சி பிரமுகர் இல்ல திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார்.…

கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததாலேயே, திமுக கூட்டுவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் கட்சி பிரமுகர் இல்ல திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசாங்கம்தான் கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதை மறுக்கவில்லை எனவும், அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் திமுக கூட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இன்றைக்கு அரசாங்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்த மு.க. ஸ்டாலின், விரைவில் திமுக ஆட்சிக்கு வரும் என்று பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply