சிங்கப்பூரில் இருந்து 3 ஆயிரத்து 898 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுடன் புறப்பட்ட ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல் விசாகப்பட்டினம் வந்தடைந்தது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, கொரோனா தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றன.இதனால்
நேயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி சிங்கப்பூரின் சங்கி கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஐராவத் கப்பல், 8 ISO க்ரையோஜெனிக் ஆக்சிஜன் களன்கள் மற்றும் அக்சிஜன் சிலிண்டர்களுடன் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுடன், இன்று விசாகப்பட்டினம் கப்பற்படை தளத்தை வந்தடைந்தது.







