விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்: எஸ்.பி.ராதாகிருஷ்ணன்

ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என விழுப்புரம் எஸ்.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் தொற்றால்…

ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என விழுப்புரம் எஸ்.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 24-ம் தேதி வரை புதுச்சேரி அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்
விழுப்புரம் நகரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ரோந்து பணியை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் வகையில் மஞ்சள் ரோந்து வாகனப் பிரிவை டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் எஸ்.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி.ராதாகிருஷ்ணன், கொரோனா ஊரடங்கை கடைப்பிடிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.