கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 607 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 46,164 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,159 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 46,164 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,159 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,17,88,440 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,33,725 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா பரவல் வீதம் 1.03 ஆகவும், தினசரி பரவல் வீதம் 2.58 ஆகவும் உள்ளது. மொத்த பாதிப்பு 3,25,58,530 ஆக அதிகரித்துள்ளது.” என தெரிவித்துள்ளது.

https://twitter.com/MoHFW_INDIA/status/1430740490282967044

உயிரிழப்பை பொறுத்த அளவில், 607 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,36,365 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 80,40,407 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 60,38,46,475 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.