முக்கியச் செய்திகள் உலகம்

காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு, தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்தி ரேலியா எச்சரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ளவர்கள், வெளிநாடு களுக்குத் தப்பி செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.

விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல் ஏராளமானோர் விமான நிலையத்தைச் சுற்றிக் காத்துக் கிடக்கின்றனர். காபூல் விமான நிலையத்தின் காம்பவுன்ட் சுவர் அருகே முட்டளவு கழிவு நீரில் நடந்துகொண்டு, பேப்பரில் எழுதிக் காண்பித்தும் கத்தியபடியும் அமெரிக்க ராணுவத்திடம், விமான நிலையத்துக்குள் அனுமதிக்கும்படி பலர் கெஞ்சு கின்றனர். இதனால் விமான நிலையத்தைச் சுற்றி பலர் காத்து நிற்கின்றனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருப்பவர்களை, உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ’அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத் தின் வாயில்களில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும்’ அமெரிக்கா, தங்கள் நாட்டினரைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதே போல ஆஸ்திரேலி யா, இங்கிலாந்து நாடுகளும் தங்கள் நாட்டினரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளன.

அங்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப் பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவின் கடைசி தொண்டன் வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள்: ஓபிஎஸ்

Niruban Chakkaaravarthi

ரெம்டெசிவர் ஒதுக்கீட்டு அளவு உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி!

Halley karthi

திமுகவை வீழ்த்த பலமான கூட்டணி தேவை – கரு.நாகராஜன்

Saravana Kumar