நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான நுஸ்ரத் ஜஹான், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் பசீர்ஹட் தொகுதி மக்களவை உறுப்பினராக இருப்பவர், நடிகை நுஸ்ரத் ஜஹான். மேற்கு வங்க நடிகையான இவர், எம்.பியானதும் தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். துருக்கியில் பிரமாண்டமாக நடைபெற்றது இவர்கள் திருமணம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் கணவரை பிரிந்த நுஸ்ரத், கணவரை பிரிந்து விட்டதாகவும் தனது திருமணம் சட்டப்படி நடைபெறவில்லை என்றும் கூறினார். இது சர்ச்சையானது. நுஸ்ரத் கர்ப்பிணியாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதுபற்றி விளக்கம் அளித்த நுஷ்ரத், ’இந்திய நாட்டின் சட்டப்படி எங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. அதனால் விவாகரத்துக்கான தேவை எழவில்லை. எங்கள் பிரிவு நீண்ட நாட்களுக்கு முன்பே நடந்துவிட்டது. இது என் தனிப்பட்ட விவகாரம். அதுகுறித்து பெரிதாக பேசவிரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான யாஷ்தாஸ் குப்தாவை நடிகை நுஸ்ரத், காதலித்து வருவதாக செய்திகள் வெளியாயின. இதுபற்றி இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை நுஷ்ரத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்றோ, நாளையோ குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்டுள்ளது.