புதுச்சேரியில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று!

புதுச்சேரியில் நேற்றும்,  இன்றும் சேர்த்து 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது.  பின்னர், பிற நாடுகளுக்கும் தொற்று…

புதுச்சேரியில் நேற்றும்,  இன்றும் சேர்த்து 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது.  பின்னர், பிற நாடுகளுக்கும் தொற்று பரவியது.
இதனால், 2020-ம் ஆண்டில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  இதன் தொடர்ச்சியாக அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன.

சிறு, நடுத்தர கடைகள், வணிக வளாகங்கள் என அத்தியாவசிய மற்றும் ஆடம்பர தேவைகளுக்கான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.  கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வகை போக்குவரத்து சேவையும் முடங்கின.  அரசின் முன்அனுமதி பெற்ற பின்னரே ஒரு நகரில் இருந்து குறிப்பிட்ட தொலைவிலான மற்றொரு பகுதிக்கு செல்ல கூடிய நிலை காணப்பட்டது.

இதையும் படியுங்கள்: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்! 3 மாத இடைவேளையில் இரண்டாவது நிலநடுக்கம்!!

இதன்பின் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து மற்றும் உணவு பொருட்கள் பெறுவதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டன. நாட்டில் முதல் மற்றும் 2-வது கொரோனா அலையில், எண்ணற்ற மக்கள் கொரோனா பாதிப்புகளை சந்தித்தனர். பலர் உயிரிழந்தனர். இதன்படி, நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தத்தில் 4.44 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இதனால் ஊரடங்கும் தளர்த்தப்பட்டது.

மேலும் 5,33,306 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.  இதனை அடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இதனால் ஊரடங்கும் தளர்த்தப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்றும்,  இன்றும் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 3 நபர்கள் மருத்துவமனையிலும், 6 நபர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.