இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14,506ஆக அதிகரிப்பு: 30 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,506க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்த வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத்…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,506க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைந்த வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,34,33.34ஆக அதிகரித்துள்ளது. 99,602 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5,25,077ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 11,574 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,28,08,066ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.59 சதவீதமாக உள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 1,97,46,57,138 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 13,44,788 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.