முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று

இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. திரை நட்சத்திரங்களுக்கும் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.

இந்நிலையில் முன்னணி பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த அக்‌ஷய் குமாருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக என்னை நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருத்துவ ஆலோசனைகளை எடுத்து வருகிறேன், சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மிக விரைவில் திரும்பி வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், இந்திய சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வழிவகுக்கும் 75 ஆவது கேன்ஸ் விழா பிரான்சில் மே 28 வரை நடைபெற உள்ளது. இந்திய சினிமா சார்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாசிட்டிவ் ஆனதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்து இருந்தார். இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், அதில் தங்களின் படம் திரையிடுவது சர்வதேச திரை கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு இந்த வாய்ப்பை தவறவிடுவதாகவும் அதில் கலந்துகொள்ள இருக்கும் மற்ற குழுவினர்களுக்கு வாழ்த்துக்களையும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

Advertisement:
SHARE

Related posts

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்!

Jeba Arul Robinson

கொரோனா தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுத்துமா ? விஞ்ஞானம் என்ன சொல்கிறது

Halley Karthik

பிசினஸ் கிளாசில் எறும்பு: பூடான் இளவரசர் செல்ல இருந்த லண்டன் விமானம் மாற்றம்

Ezhilarasan