முக்கியச் செய்திகள் தமிழகம்

‘அடுத்தவர் மொழியை பழிப்பது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல’

‘நமது தாய்மொழியான தமிழை பாராட்டும் போது அடுத்தவர் மொழியை பழிப்பதோ, அடுத்தவர் தொழிலை குறைவாக பார்ப்பதோ நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல’ என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பௌர்ணமி அன்று கன்னியாகுமரியில் நடந்து வரும் கடல் ஆரத்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், இது கங்கா ஆரத்தி போன்றது எனவும் தெரிவித்தார். மேலும், இதன் மூலம் இளைஞர்களுக்கு நதி நீரின் முக்கியத்துவம் பற்றி தெரிவதற்கும் நதி நீரை சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் இளைஞர்களிடையே வளரும் என கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழியை விருப்பப்பட்டால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என தெரிவித்த அவர், மக்களுக்கான பெயர் பலகை கூட தமிழில் தான் உள்ளது என குறிப்பிட்டார். மேலும், நாம் நமது மொழியை பாராட்டும் அதே வேளையில் அடுத்தவர் மொழியை பழிப்பது அல்லது அவர்களது தொழிலை குறைவாக மதிப்பிடுவது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல என கூறினார்.

அண்மைச் செய்தி: ‘அதிமுக திட்டங்களை மூடியதே திமுக சாதனை – டி.டி.வி.தினகரன் சாடல்’

தொடர்ந்து பேசிய அவர், இன்னொரு மொழியை படிப்பதால் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு அது பயனுள்ளதாக அமையும் எனத் தெரிவித்த அவர், இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை என உறுதிபட தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ஆன்மீக தமிழ் உள்ளது எனத் தெரிவித்த அவர், ஆன்மிகத்தை விடுத்து தமிழ் கிடையாது எனவும் குறிப்பிட்டார். மேலும், தமிழின் பெருமையை நாம் உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!

Gayathri Venkatesan

பைக் விபத்து: முன்னாள் சுழல், ஷேன் வார்ன் மருத்துவமனையில் அனுமதி

Halley Karthik

அதிமுகவில் 5 இடங்கள் கோரிய புதிய நீதிக் கட்சி!

Gayathri Venkatesan