அன்புமணி ராமதாஸ் அதிமுக தலைவர்களை விமர்சிப்பதை பொறுத்துக்கொள்ளமுடியாது:புகழேந்தி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தவறாக பேசினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாது என அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தவறாக பேசினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாது என அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது, “அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு, சட்டப்பேரவை தேர்தலில் 23 இடங்களை பாமக பெற்றதாகவும், தற்போது ஓபிஎஸ் குறித்து அன்புமணி ராமதாஸ் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருவகிறார்.

சட்டப்பேரவை தேர்தலில், பாமக இல்லையென்றால், அதிமுக 20 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். கூட்டணியில் 23 இடங்களை பெற்றுக் கொண்ட பாமக, 18 இடங்களில் தோல்வியை தழுவியதாக சுட்டிக்காட்டிய அவர், பாமகவால், அதிமுகவுக்கு எந்த உதவியும் இல்லை என கூறினார். எனவே, அதிமுக குறித்தும், ஓ.பிஎஸ் குறித்தும் அன்புமணி ராமதாஸ் தவறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.