நடிகர் ஜேம்ஸ் மாக்கவோய் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டி, தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்து இந்தியா போராடி வருகிறது. இந்த கொரோனா நெருக்கடி உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதைத்தொடர்ந்து X-Men தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜேம்ஸ் மாக்கவோய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த விடியோவில், “இப்போது இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுகின்றனர்” என கூறியிருந்தார். தொடர்ந்து, அவர் தனது ரசிகர்களிடம், கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்திய மக்களுக்கு உதவுங்கள். மேலும், இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிருங்கள் என தெரிவித்தார்.
இவர் மட்டுமின்றி கமிலா கபெல்லோ, ஷான் மெண்டீஸ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் இந்தியாவுக்கு நிதி திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.