கொரோனா 3-வது அலை; தடுப்பு பணிகளை தீவிரப்படுத்திய மு.க.ஸ்டாலின்

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடத்தப்படும் கொரோனோ விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா வழிகாட்டு…

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடத்தப்படும் கொரோனோ விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மக்கள் நல்வாழ்வு துறையால் தயார் செய்யப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை பார்வையிட்டார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கொரோனோ BADGE-ஐ வெளியிட்ட அவர், கொரோனோவை வெல்லும் தமிழ்நாடு என்ற பெயரில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்விலும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக தயார் செய்யப்பட்ட காணொலியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், MASK UP TN என்ற பெயரில் வைக்கப்பட்ட செல்பி மையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்வின் இறுதியாக, தமிழ்நாடு முழுவதும் செல்லும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.