இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தின் வாயிலாக ஊடுருவ முயன்ற இருவரை எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே தேஹ்லான் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லை பாதுகாப்புப்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுவ முயன்ற இருவரை கண்ட எல்லைப் பாதுகாப்புப்படையினர் அவர்கள் இருவரையும் சுட்டு வீழ்த்தினர்.
இது குறித்து வெளியிடப்பட்ட எல்லைப்பாதுகாப்புப்படை அறிக்கையில், “இந்தியாவுக்குள் ஊடுவமுயன்றவர்களை தடுக்கும் விதமாக முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கையை அவர்கள் மதிக்காமல் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுவ முயன்றனர். எனவே அவர்களை எல்லைப்பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர்,” என்று கூறப்பட்டுள்ளது,
ஊடுருவல் முயற்சி குறித்தும், சுட்டுக் கொல்லபட்டவர்கள் குறித்தும் எல்லைப்பாதுகாப்புப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னரே மேலும் அதிக தகவல்கள் வெளியே வரும் என்று அதிகாரிகள் கூறினர்.







