கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – உதவிகளை வழங்க தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த…

கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 இன்று மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நாளை மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும்.

இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒரிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது.

இந்த விபத்தில் 132 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ஒரிசா மாநில அரசின் முதன்மை செயலாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

” ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக  ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

https://twitter.com/mkstalin/status/1664661524470964229

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க  போக்குவரத்துத் துறை அமைச்சர்  மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக #Helpline உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.