சசிகலாவுடன் தொலைபேசி உரையாடல்: 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை…

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.

அதில், முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், வி.கே.சின்னசாமி, வாசு, சோமாத்தூர் சுப்பிரமணியம், வின்சென்ட் ராஜா, பருத்தியூர் நடராஜன், அருள்ஜோதி, சுஜாதா ஹர்ஷினி, அம்மா எஸ்.சிவா, பில்மூர் ராபர்ட், ஸ்ரீதேவி பாண்டியன், ராஜேஷ் சிங், ஒட்டக்காரர் என்.ராஜூ, சதீஷ், ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் இவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்ட மீனவர் பிரிவு துணை செயலாளராக இருந்த ஏ.கே.எம்.அழகர்சாமியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.