முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு குறித்த சர்ச்சை; ஆளுநர் மாளிகை விளக்கம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வலியுறுத்திப் பேசினார் என்ற சர்ச்சை வலுத்துள்ள நிலையில், அவரது பேச்சின் உண்மையான உள்ளடக்கத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமத்துக்கான ஏற்பாடுகளை செய்த அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதன் உண்மையான எழுத்து வடிவ மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், பிரதமர் மோடி நமது நாட்டை “பாரதம்” என்ற கண்ணோட்டத்தில், “ஒரே குடும்பமாக” பார்க்கிறார். ஆனால் இந்த யதார்த்தம் காலனித்துவ காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட புகைமூட்டத்தால் மறைக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் கூறியுள்ளார்.

அதற்கேற்பவே தமிழகத்தில் “நாங்கள் திராவிடர்கள்” என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை ; நாம் அரசியலமைப்பால் ஒன்றிணைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே செயலாற்றுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ‘நாங்கள் ஒருங்கிணைந்த தேசத்தின் அங்கம் இல்லை’ என்று வலுவான ஒரு கதையை சொல்லி வருகிறார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதனாலேயே நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அனைத்தையும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ‘இல்லை, எங்களுக்கு வேண்டாம்’ என்று சொல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

இதற்கு மாறாக நாம் அனைவரும் ஒன்று. பாரதத்தின் ஒரு பகுதி தமிழ்நாடு. அதற்கேற்ப தமிழகம் என்று நாம் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. காரணம், இந்த நிலம் பாரதத்தின் ஆன்மாவை, பாரதத்தின் அடையாளத்தை பராமரிக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டினர் ஏற்படுத்திய பல அழிவுகளையும் மீறி பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் ஒற்றுமை பராமரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள ஆளுநர் ரவி , முழு பாரதத்தையும் நிலைநிறுத்தி அதற்குப் புத்துயிர் தருவது இந்த நம்பிக்கை தான் ; இப்போது இதை சிலர் பொய்யாக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும்  குறிப்பிட்டதாக, ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியூ சினிமாவின் டான் – வாலியில் தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா திரை பயணம்

Web Editor

அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல்கொடுத்தால்…. துரைமுருகன்

Halley Karthik

இரவில் அதிக நேரம் கண் விழிப்போர் கவனத்திற்கு..

EZHILARASAN D