முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பார்டி!

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, சக நாட்டு வீராங்கனையான டாம்லனோவிச்சை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஆஷ்லே பார்டி, 6-1, 6-3 என்ற நேர் செட் கணாக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில், 2018ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான ஏஞ்செலிக் கெர்பரை, ஆஷ்லே பார்டி எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா, பெலாரஸைச் சேர்ந்த சபலென்கா ஆகியோர் மோதுகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கவுரி அம்மா காலமானார்!

Halley karthi

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ezhilarasan

திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!

Saravana Kumar