தொடர் கனமழை எதிரொலி – தூத்துக்குடிக்கு பதில் கோவில்பட்டியில் நடைபெற்ற போட்டித்தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான போட்டித்தேர்வு திட்டமிட்டப்படி இன்று (ஜன.6) தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு,  ஜன.6,  7 ஆகிய…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான போட்டித்தேர்வு திட்டமிட்டப்படி இன்று (ஜன.6) தொடங்கியது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு,  ஜன.6,  7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த பணிக்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள 369 காலியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது.

இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 59,630-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.  இந்த நிலையில் தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக,  இந்த போட்டித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படியுங்கள்: பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்!

ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த போட்டித் தேர்வு தமிழ்நாடு முழுவதும் முன்னர் அறிவித்திருந்ததை போல் இன்று (ஜன.6) தொடங்கியது. இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்து இருந்த 1,130 தேர்வர்களுக்கு தூத்துக்குடியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக,  தூத்துக்குடியில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து தூத்துக்குடியில் தேர்வு நடத்த முடியாத சூழல் நிலவியது.  இதன் காரணமாக இந்த போட்டி தேர்வு மையம் கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி, கே ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இரு இடங்களில் இன்று (ஜன.6)  தேர்வு  நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.