தமிழக தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த, தேடுதல் குழுவின் தலைவர் நீதியரசர் அக்பர் அலி பிப்ரவரி 14 ஆம் தேதி குழுவின் அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார்
தேர்வுக்குழு அளித்த தகுதியானவர்கள் பட்டியலைக் கொண்டு தகவல் ஆணையர்களை முதலமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொண்ட தேர்வுக் குழு கூடி தேர்வு செய்யும்.
இதையும் படிக்க: நாமக்கல்: துவக்கப்பள்ளி காலை சிற்றுண்டி திட்டத்தை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களின் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் வெளியிடப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமை தகவல் ஆணையராக இறையன்பு தேர்வு செய்யப்பட்டால், முன்னதாகவே ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளார்.
-ம.பவித்ரா








