தொடர்ந்து என்னை புறக்கணிக்கின்றனர் – எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றச்சாட்டு

சேலம் மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்டவிரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் தன்னை எதிர்க்கட்சி எம்பி என்று நினைக்கிறார்…

சேலம் மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்டவிரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் தன்னை எதிர்க்கட்சி எம்பி என்று நினைக்கிறார் போலும் என ட்விட்டரில் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், சுயமரியாதை என் உயிருக்கு மேலானது‌. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பி.க்கு அழைப்பு கொடுக்கக் கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத் தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

 

ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளைச் செய்யவிடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி. என்று நினைக்கிறார் போலும். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார். என்னை புறக்கணிப்பது, எனக்கு வாக்களித்து 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்குச் சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.