இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஐசியு வில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான…

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஐசியு வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான சர்க்கரை அளவு பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற அவருக்கு, உடலில் உப்பின் அளவும் நீர்ச்சத்தின் அளவும் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் பாரதிராஜா மிகவும் சோர்வாக இருந்ததையொட்டி அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.பின் அவரின் உடல் நிலை தேறிவந்த நிலையில் இவர் இன்னும் ஓரிரு நாட்களில் வீடுதிரும்புவார் எனத் தகவல்கள் வெளியாகியனது. இந்த நிலையில் டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதன் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் அனுமதிக்கப்படுகிறார். இதற்கான ஏற்பாட்டினை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏசி.சண்முகம் செய்து வருகிறார்.

கடந்த ஐந்து  நாட்களாக மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவ மனைக்கு மாற்றப்பபட்டுள்ளதால் அவர் விரைவில் சிகிச்சை முடிந்து நலம்பெற்று வீடு திரும்பத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த  இயக்குனர் பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஐசியு வில் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.