பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 4 கேள்விகளை முன்வைத்தார்.  கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 4 கேள்விகளை முன்வைத்தார். 

கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாட்டில், மத்திய அரசின் கொள்கைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு முதல் இமாச்சலப் பிரதேசம் வரை நாட்டு மக்கள் கூறும் ஒரு பெயர் அதானி என்றும், அதானிக்கு ஆதரவாக மோடி அரசு, விதிகளை மாற்றியமைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.  மோடி – அதானி இடையேயான உறவு குறித்து அறிந்துகொள்ள மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆவேசமாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நான்கு கேள்விகளை முன்வைத்தார்:

1. நீங்களும் அதானியும் சேர்ந்து எத்தனை முறை வெளிநாடு சென்றிருக்கிறீர்கள்?

2. உங்களின் வெளிநாட்டுப் பயணங்களில் அதானி எத்தனை முறை இணைந்து பயணித்திருக்கிறார்?

3. உங்களின் வெளிநாட்டுப் பயணம் முடிந்த உடனேயே, அந்த நாட்டுக்கு எத்தனை முறை சென்று அதானி ஒப்பந்தம் செய்துள்ளார்?

4. தேர்தல் நிதியாக பாஜகவுக்கு அதானி கொடுத்த தொகை எவ்வளவு?

என பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.