குப்பை கழிவுகளால் இறந்து போன ராட்சத ஆமைகள் – சென்னை காசிமேட்டில் பரபரப்பு

காசிமேடு கடற்கரைப் பகுதியில் 25 கிலோ எடை கொண்ட மூன்றுக்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து நிலையில் கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மீன் விறபனைக்கு பெயர் போன காசிமேடு கடற்கரை பகுதியில்…

காசிமேடு கடற்கரைப் பகுதியில் 25 கிலோ எடை கொண்ட மூன்றுக்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து நிலையில் கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மீன் விறபனைக்கு பெயர் போன காசிமேடு கடற்கரை பகுதியில் அதிகப்படியான குப்பை கழிவுகள் சேர்ந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் அதிகப்படியான துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடற்கரை ஓரங்களில் அதிகப்படியான குப்பைகள் கழிவுகள் சேர்ந்திருப்பதால் உணவுக்காக கரையோரம் வரும் கடல்வாழ் உயிரினங்கள் அதனால் இறந்து போகும் அபாயம் ஏற்படுகிறது.

அப்படியான ஒரு நிகழ்வுதான் இன்று சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் நிகழ்ந்துள்ளது.கடற்பரப்பிற்கு உணவு தேடி வந்த 25 கிலோ எடை கொண்ட மூன்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் அங்கு தேங்கி நின்ற குப்பை கழிவுகளால் இறந்து கிடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பார்ப்பவர்களையும் முகம் சுளிக்கும் படியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இதற்கு பிறகும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாமதிக்காமல் கடற்பரப்பிற்கு உணவு தேடி வரும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் துரிதமாக செயல்பட்டு கடற்கரை ஓரம் இருக்கக்கூடிய கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இறந்து இருக்கக்கூடிய கூடிய ஆமைகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.