மத்திய பிரதேசத்தில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சச்சின் பிர்லா பாஜகவில் இணைந்தார். கர்கோன் மாவட்டத்தில் உள்ள பர்வாஹா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான சச்சின் பிர்லா…

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சச்சின் பிர்லா பாஜகவில் இணைந்தார்.

கர்கோன் மாவட்டத்தில் உள்ள பர்வாஹா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான சச்சின் பிர்லா (40), பாஜகவின் மாநில அலுவலகத்தில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் கட்சி பிரிவுத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் உறுப்பினராக சேர்ந்தார்.

2021 அக்டோபரில் சச்சின் பிர்லா பாஜகவில் இணைந்தார். ஆனால் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. 2018 சட்டப்பேரவைத் தேர்தலில், குர்ஜார் வாக்காளர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவின் காரணமாக பர்வாஹா தொகுதியில் பிர்லா வெற்றி பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.