காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்டாரா இல்லையா என்பதை தெரியபடுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் உள்ளிட்டவை குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய அரசு முறையாக செயல்படவில்லை என்றும் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்,
“ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா, இல்லையா என இந்த நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது. இன்னும் நீங்கள்(ராகுல் காந்தி) தடுப்பூசிபோடவில்லை என்றால், உடனடியாக நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்,” என்று கூறியுள்ளார்.







