முக்கியச் செய்திகள் இந்தியா

88 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் குறைந்த கொரோனா எண்ணிக்கை!

இந்தியாவில் 53,256 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 88 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது.

கொரோனாவால் இந்திய அளவில் 53,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,99,35,221 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் நேற்றைய தினத்தில் மட்டும் 1,422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 3,88,135 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்தில் 78,190 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதன்மூலம் கொரோனாவிலிருந்து 2,88,44,199 குணமடைந்துள்ளனர்.

இந்தியளவில், தற்போது 7,02,887 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 28,00,36,898 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பஞ்சாப்பின் புதிய முதலமைச்சர் யார்? பரபரக்கும் தகவல்

Ezhilarasan

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Jeba Arul Robinson

மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்

Jeba Arul Robinson