புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தின் எதிரொலியாக, பட்டியலின மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர் மலம் கழித்துள்ளார். தொடர்ந்து, மலம் கலந்த நீரை குடித்த அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும், கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, பட்டியலின மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.







