முக்கியச் செய்திகள் இந்தியா

இன்று மாலை கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில், அம்மாநில முதலமைச்சராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் படுதோல்வியடைந்தது பேசுபொருளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், 5 மாநில தேர்தலில் தோல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறிய கருத்து குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூர்யாவுக்கு ஆதரவாக பழங்குடி மக்கள் நூதன போராட்டம்

G SaravanaKumar

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Jeba Arul Robinson

வணிகர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர்

EZHILARASAN D