முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாம் தமிழர் – ஆதித் தமிழர் கட்சியினரிடையே மோதல்

அருந்ததியர்களை அவதூறாக பேசியதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்த ஆதித் தமிழர் கட்சியினருக்கும் இரு தரப்பினரும் மாறி, மாறி சரமாரி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
அவதூறாக பேசியதை கண்டித்து போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை
ஆதித்தமிழர் கட்சி அமைப்பின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு
செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று 50க்கும் மேற்பட்ட ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கைகளில் கட்சி கொடிகளை ஏந்தி கொண்டு ஊர்வலமாக வந்தவர்களை ஆற்காடு சாலையில் போரூர் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் போலீசாரின் தடுப்பையும் மீறி பத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

இதையும் படிக்க: நீட் தேர்வு – இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

அப்போது அங்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கல் வீசி தாக்கி கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு  ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதனையும் படியுங்கள்: தனியார் பேருந்து விவகாரம்: அரசின் சலுகைகள் எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முற்றுகை போராட்டம் ஏற்கனவே நடைபெறும் என போலீசாருக்கு வந்த தகவல் கிடைத்த பிறகும் முறையான பாதுகாப்பு பணி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  இல்லாமல் போரூர் போலீசார் இருந்த காரணத்தால்தான்  இந்த அடிதடி சம்பவம் நடைபெற்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும்” – அமைச்சர்

Halley Karthik

ஈரோடு இடைத்தேர்தல்: EVM மிஷின்கள் சரிபார்க்க மாதிரி வாக்கு பதிவு..

Web Editor

புதுச்சேரி அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்; மாணவர்கள் பாதிப்பு

Yuthi