அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி – இந்தியா கூட்டணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக்…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். 

டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதையும் படியுங்கள் : ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், மார்ச் 21 ஆம் தேதி  கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.  இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை மார்ச் 21 ஆம் தேதி இரவு அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கெஜ்ரிவாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இதனிடையே, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் செல்லும் சாலைகளில் பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.  பாஜக தலைமை அலுவலகம்,  அமலாக்கத் துறை அலுவலகம் உள்ள மத்திய டெல்லி சாலை மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே தற்போது, டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள சாகின் பார்க் என்னும் இடத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்லாமல்  இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, டெல்லியில் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மற்றும் இந்தியா கூட்டணி சேர்ந்த தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.