மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை,  தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை,  தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 முதல் தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  திமுக சார்பில் தென்சென்னை தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களமிறங்குகிறார்.

இந்த நிலையில்,  திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் இன்று (மார்ச்.23) காலை 11.30 மணியளவில் சந்தித்து ஆதரவு பெற்றார்.  அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.