நடிகர் யோகிபாபு குடும்பத்துடன் சாமி தரிசனம்

ஊத்துக்கோட்டை அருகேயுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழ்நாடு – ஆந்திர எல்லையோர பகுதியில் சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அங்கு குடும்பத்தினருடன்…

ஊத்துக்கோட்டை அருகேயுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழ்நாடு – ஆந்திர எல்லையோர பகுதியில் சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

அங்கு குடும்பத்தினருடன் சென்ற நடிகர் யோகிபாபு, சாமி தரிசனம் செய்தார், அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் முதல் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்றுவரும் திருப்பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதனை பார்வையிட்ட யோகிபாபு, கோயிலுக்கு தன்னால் முடிந்த உதவியை அளிப்பதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.