முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச், இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் மற்றும் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினியும், போலாந்தின் ஹூபெர்ட் ஹர்கக்ஸ்-சும் மோதினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், முதல் 2 செட்டுகளை 6க்கு 3, 6க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இத்தாலி வீரர் முன்னிலை பெற்றார். மூன்றாவது செட்டை 7க்கு 6 என்ற கணக்கில் போலந்து வீரர் கைப்பற்றியதால் ஆட்டம் நீடித்தது. இதனையடுத்து, 4வது செட் கணக்கை 6க்கு 4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இத்தாலி வீரர் பெர்ரெட்டினி வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சும், கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், ஒவ்வொரு செட்களையும் தனதாக்கிக் கொண்டு வந்தார். இதனால், ஷபோவலோவால் ஒரு செட்டையும் கைப்பற்ற முடியவில்லை. முடிவில், 7க்கு 6, 7க்கு 5, 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச், நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொள்கிறார். இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், இந்த முறை பட்டம் வென்றால் பெடரெர், நடால் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”புதிய வகையான கொரோனா தொற்றை கண்டு பயப்பட வேண்டாம்”- செல்லூர் ராஜூ!

Jayapriya

26ம் தேதி பாஜக எம்எல்ஏ கூட்டத்துக்கு எடியூரப்பா அழைப்பு: தொடரும் கர்நாடகா அரசியல் சர்ப்ரைஸ்

Niruban Chakkaaravarthi

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

G SaravanaKumar