ஜனவரி 19 தேதி வரை மட்டுமே மகரவிளக்கு தரிசனத்திற்காக பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என தேவசம் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 அன்று திறக்கப்பட்ட சபரிமலை
ஐயப்பன் கோவில் நடை வரும் ஜனவரி 20ஆம் தேதி காலை 6 மணிக்கு மூடப்படும் என்று
திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜனவரி 19ம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வசதி
செய்யப்பட்டுள்ளது. 20ம் தேதி சபரிமலைக்கு வரும்பக்தர்கள் கோவிலுக்கு செல்ல
அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்கிடையில் நாளையுடன் நெய்யாபிஷேகம்
நிறைவடைகிறது. அதேபோல திருவாபரணம் தரிசனமும் நாளை நிறைவடைகிறது.
இந்த நிலையில் நாளை ”இரவு பூஜை”க்கு பின் மாளிகபுரம் மணி மண்டபத்தில் இருந்து
சாரம்குத்தி வரை அய்யப்பன் எழுந்தருளல் நடக்கிறது. வரும் ஜனவரி 19ம் தேதி இரவு
உணவு பூஜைக்கு பின் ஹரிவராசனம் சங்கீர்த்தனம் பாடப்பட்டு கோவில் நடை
மூடப்படும்.
அதற்கு பின் மாளிகாபுரம் கோவிலில் குருதி பூஜை நடக்கும். அதனை தொடர்ந்து வரும் ஜனவரி 20ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்குள் திருவாபரன திருப்பணி நடைபெறும். அதனை தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டு 2022-23ம் ஆண்டு மகரவிளக்கு காலம் நிறைவடையும் என கோவில் நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.