இந்தியா-நியூசிலாந்து ஒரு நாள் போட்டி: ஷ்ரேயஸ் ஐயர் விலகல்!

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.  நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.…

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார். 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரு நாள் போட்டியில் கேப்டனாக டாம்லாதமும், டி20 போட்டி தொடரில் சான்ட்னரும் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளை (18ம் தேதி) நடக்கிறது. சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக , ஷ்ரேயஸ் ஐயர் விலகுவதாகவும், அவருக்கு பதில் ரஜத் பட்டிதார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.