முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் 2 தொகுதிகளை கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…!

வருகிற நாடாளுமன்றத்தில் தேர்தலில் 2தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்
காதர் மொய்தீன் செய்தியாளர் சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பொதுக்குழு கூட்டம் என்பது எங்களது பாராளுமன்றம் தேர்தலில் எதிர்கொள்வது குறித்து சில தீர்மானங்கள் எடுத்து உள்ளோம்.  அனைவரின் ஒப்புதலுடன் 4 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டது ,
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பின் பொறுப்பாளர்கள் அவர்களுடைய இயக்கத்தை வலுப்படுத்த உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க
அதிகாரம் உள்ளது, அதை செய்வதற்கு அவர்கள் கடமைபட்டுள்ளனர்.

முதல் தீர்மானமாக திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும் எனும் அடிப்படையில் எங்களது பணியினை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றோம். வரும் நவம்பர் 14 ஆம் தேதி டெல்லி கள்கோத்திரா
ஸ்டேடியத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவில், காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியா என்கிற பெயரில் கூட்டணி அமைத்து , பாஜக ஆட்சியை அகற்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நல்லாட்சியை மத்தியில் கொண்டு வர வேண்டும். இந்தியா கூட்டணி உருவான
நாள் முதலே பிரதமர் நரேந்திர மோடி பெரும் குழப்பத்தில் இருக்கிறார்.

9 மண்டலங்களில் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி பயிலரங்கம் நடத்த உள்ளோம் ,
மண்டலங்களில் ஒரு நாள் நடக்கும் பயிலரங்கில் முஸ்லீம் லீக் தொடர்பான  வரலாறு எடுத்துரைக்கப்படும். இந்த கருத்தரங்கத்தில் அனைத்து மத தலைவர்களை அழைத்து தமிழகத்திற்கு மட்டும் இல்லாமல் இந்தியா மக்களை ஒன்று படுத்தக்கூடிய வகையில் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வோம். இதுவரை
வேலூர் , தேனி , மயிலாடுதுறை , வட சென்னை , ராமநாதபுரம் என 5 தொகுதிகளில்
போட்டியிட்டுள்ளோம்.  கடந்த முறை 1தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். தற்போது 2 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட
கேட்க உள்ளோம். ராமநாதபுரம் மற்றும் திருச்சி தொகுதியை கேட்க உள்ளோம். கட்டாயம் இந்த முறை 2 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவோம்.

இஸ்லாமிய சமுதாய வாக்கு பாஜகவிற்கு இல்லாமல் போனதுக்கு காரணம் இஸ்லாமிய மக்களை இந்திய மக்களாக பாஜக பார்ப்பதில்லை. எந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இஸ்லாமிய மக்களை தேர்தலில் நிற்க வைக்கவில்லை. முஸ்லிம் மக்களின் வாக்கு தேவை இல்லை என வெளிப்படையாக கூறுகின்றனர் , எந்த நாளும் முஸ்லீம் மக்களின் வாக்கு பாஜகவிற்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும் பாஜக அதிமுக கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம். காலையில் ஒருவர்
கூட்டணியில் இல்லை என்கிறார் , மாலையில் ஒருவர் கூட்டணியில் தான் உள்ளோம்
என்கிறார் , இந்த நாடகத்தை ஒருபோதும் முஸ்லீம் சமுதாயம் நம்பாது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழக தலைவர்
மு.க.ஸ்டாலின் மார்ச் 10 ஆம் தேதி நடந்த மாநாட்டில் அனைத்து அதிகாரிகளை
பார்த்து சந்தித்து அனைவரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கக் உள்ளார்.

இஸ்லாமிய சிறைவாசிகளை தனியார் மருத்துவமனையில் வைத்து பரோலில் பார்க்க தமிழக அரசு முடிந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு அனுமதி வழங்கும் பொறுப்பு  ஆளுநரிடம் உள்ளது , அவரை சந்தித்து கோரிக்கை அளிக்க நேர அவகாசம் கேட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

முதல்வராகப் பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் வாழ்த்து!

Halley Karthik

ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்; அமைச்சர்

G SaravanaKumar

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் அமலாக்கத் துறை விசாரணை

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading