காமன்வெல்த் கேம்ஸ் 2022- தங்கம் வென்று மீராபாய் சானு அசத்தல்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பேட்மின்டன்,…

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
பேட்மின்டன், கிரிக்கெட், சைக்ளிங்க, குத்துச்சண்டை, மல்யுத்தம், பளுதூக்குதல் என பல விளையாட்டுகள் இந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை சங்கீத் மகாதேவ் பெற்றுத் தந்தார். ஆண்களுக்கான 55 கிலோ பளுதுாக்குதல் போட்டியில், இந்தியா சார்பில் சங்கீத் மகாதேவ் பங்கேற்றார். மூன்று முறை தேசிய சாம்பியன் ஆன இவர் முதன் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று வெள்ளி வென்றுள்ளார்.
55 கிலோ எடைப் பிரிவில் பிந்தியாராணி தேவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையைத் தூக்கி இவர் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு, 201 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்று அசத்தினார். இவர் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார்.

மீரா பாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் மீரா பாய் சானுவை வாழ்த்தினார்.
இதனிடையே, ஆடவர் பிரிவில் குருராஜா பூஜாரி 61 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்றார்.

இதன்மூலம், இந்தியாவுக்கு பளுதூக்குதலில் மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.