பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 பாடப்பிரிவுகளில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு 2021 டிசம்பர் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ்,பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு கடந்த ஜூலை 22ம் தேதி 5 பாடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, மீதமுள்ள 10 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கணிதம் ஆங்கிலம் இயற்பியல் , வேதியியல், EEE, ECE, மெக்கானிக்கல் , சிவில், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.
– இரா.நம்பிராஜன்








