33.5 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ க்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ” சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலே, இப்போது அரசுக்கு இருக்கக்கூடிய நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப, ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். இங்கே உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.

 

அதன்படி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் வருகின்ற ஜூன் மாதம் முதல், 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். அதேபோல், குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூறினார்

மேலும் முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் மருத்துவப் படி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading