ஓமலூர் அருகே , பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார்
கல்லூரி இளைஞர்களும் , செல்லப்பிள்ளை குட்டை ஊராட்சி நிர்வாகமும்
இணைந்து, செல்லப்பிள்ளைகுட்டை கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
சேலம் மாவட்டம் , ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் , நாட்டு நலப் பணித்திட்ட இளைஞர்களும் மற்றும் செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சி நிர்வாகமும் இணைந்து , செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாண்டியூர் , பாகல்பட்டி , மல்லகவுண்டனூர், பாவனூர், தக்காளி காடு மற்றும் காவாண்டப்பட்டி ஆகிய பகுதிகளில், தூய்மை பாரதம் சிறப்பு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் முகாம் நடைபெற்றது .
இந்த முகாமை கல்லூரி முதல்வர் காதர் நவாஸ் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து,
ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலம் மற்றும் துணைத் தலைவர் காயத்ரி சம்பத் ஆகியோர், கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர். பின்னர், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ரோடு ஓரங்களில் குழி தோண்டி மரக்கன்றுகளை நட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் , அதற்கு தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து மரக்கன்றுகள் ஆடு மாடுகள் மேயாத வண்ணம் பாதுகாப்பு வளையங்களை அமைத்தனர் . இந்நிகழ்வில் , சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர் . இதன் மூலம் செல்லப்பிள்ளைகுட்டை கிராமத்தில் பசுமையை ஏற்படுத்தும் நோக்கத்தில் , இன்று மரக்கன்றுகளை நட்டதாக கூறினர் .
-கு.பாலமுருகன்