கல்லூரி மாணவர் பலியான விவகாரம்; அஜித், விஜய் மீது வழக்கு?

துணிவு திரைப்படம் பார்க்க சென்ற கல்லூரி மாணவர் பலியான விவகாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான…

துணிவு திரைப்படம் பார்க்க சென்ற கல்லூரி மாணவர் பலியான விவகாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகிணி திரையரங்கில் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும்  ஜனவரி 11ம் தேதி  வெளியானது.

இந்நிலையில், அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை ரோகிணி திரையரங்கில் பார்க்க வந்த  19 வயதான  பரத்குமார் எனும்  ரசிகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது நடனம் ஆடியபடி கீழே குதித்த போது கீழே விழுந்தார். இதில் அவரது முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த ரசிகரை அருகில் இருந்தவர்கள் கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் அந்த ரசிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த ரசிகர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சார்ந்தவர் என தெரிய வந்தது.

இந்நிலையில் துணிவு திரைப்படம் பார்க்க சென்ற கல்லூரி மாணவர் பலியான விவகாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது இரு குழுவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல், கலவரத்தை தூண்டும் வகையில்
செயல்படுதல், ஆகிய இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கவன குறைவாக செயல்பட்டு மாணவர் பரத் பலியாவதற்கு காரணமாக இருந்த திரையரங்கு உரிமையாளர் மீது கவனக்குறைவாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்கிற இந்திய தண்டனைச் சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்வகுமார் என்பவர் இணைய வழியாக புகார் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.