இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைகோள் புகைப்படத்தில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நகரமுமே புதைப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில் கோவில், வீடு, குடியிருப்பு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரிய அளவில் திடீர், திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்து உள்ளனர். அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் அரசு நிர்வாகம் குழு அமைத்து செயல்படுத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இஸ்ரோ, ஐ.ஐ.டி. அமைப்புகளுடன் இணைந்து இந்த விரிசலுக்கான காரணம் பற்றி ஆய்வும் செய்து வருகிறது. தொடர்ந்து, கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதித்து உள்ளது. விரிசல் கண்ட ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களை இடிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விரிசலானது தொடர்ந்து பரவி வருகிறது. இயற்கை பேரிடரால் இதுபோன்று ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து இஸ்ரோ உத்தரகாண்டின் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலசரிவு குறித்து ஆய்வினை மேற்கொண்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைகோள் புகைப்படத்தில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நகரமுமே புதைப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் துல் நவம்பர் மாதம் வரை நிலம் சரியும் நிகழ்வானது மிக மெதுவாக நடந்து வருவதாகவும், இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 8.9 செ.மீ. அளவுக்கு நிலம் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், டிசம்பர் முதல் ஜனவரி வரை இந்த நிலசரிவின் வேகம் அதிகரித்து 12 நாட்களில் 5.4 செ.மீ அளவுக்கு சரிந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.